தெய்வத்தின் வடிவமாக காட்சி தரும் முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆட்சிப் புரியும் உத்தரப்பிரசேத மாநிலத்தின் மக்கள்தொகை அதிகமாக உள்ள நகரமான கான்பூரில், வீதியெங்கும் ஓலம் ஓங்கி ஒழித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உரிய சிகிச்சை வசதி இல்லாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பவர்களை உரிய முறையில் தகனம் செய்வதற்கு கூட நேரம் இல்லாமல், கான்பூரில் எப்போது பார்த்தாலும் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொத்து கொத்தாக எரிக்கப்பட்டிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார் கான்பூரைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர்.
ஒரே நேரத்தில் 38 சடலங்கள் எரியூட்டப்படுவதாகவும், அதே நேரத்தில் புதிய சடலங்கள் வந்தால், ஏற்கெனவே எரிந்துக் கொண்டிருக்கிற சடலங்களை, முழுமையாக எரிந்து சாம்பலாவதற்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் புதிதாக வந்துள்ள சடலத்தை வைத்து எரியூட்டுவதாக கண்ணீர் வடிக்கிறார் கான்பூர் புகைப்பட ஊடகவியலாளர்….
எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது இந்தியா….கொரோனோவில் இருந்து எளிதாக குணமடைவதற்கு சித்த வைத்தியம் பெரிதும் உதவியாக இருக்கும்போது, அதனை நாடு தழுவிய அளவில் மருத்துவச் சிகிச்சையாக முன்னெடுக்காமல், கொத்து கொத்தாக மக்கள் சாவதை வேடிக்கைப் பார்ப்பதாக மோடி அரசாங்கத்திற்கு அழகு..? இந்தியாவை கேவலமாக பார்த்துக் கொண்டிருக்கிறது பன்னாடுகள் என்ற வெட்கம் கொஞ்சம் இருக்க வேண்டாமா மத்தியில் ஆளுப்வர்களுக்கு?