குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய பாஜக அரசின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை டெல்லியில் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரவுபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார்.
மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திரவுபதி முர்மு 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகள், அதாவது எம்பி, எம்எல்ஏக்கள் அளித்த ஒட்டுமொத்த வாக்குகளில் 64 சதவீத வாக்குகளைப் பெற்று இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா, 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதையடுத்து, திரவுபதி முர்மு வெற்றிப் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எம்.பி.க்கள் வாக்களித்த விவரம்:
இதனையடுத்து, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள திரவுபதி முர்மு இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதேபோல, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள் குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள் திரவுபதி முர்முவுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு, இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பிஜு பட்நாய்க்கும் அம்மாநில மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திரவுபதி முர்மு அவர்களுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:
இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரவுபதி 36 முர்மு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ….
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்பு மிகுந்த அரசியலமைப்பின் பாற்பட்ட மக்களாட்சியை உறுதி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம் –