Fri. Nov 22nd, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் இன்று காலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

மேள தாளங்கள் இசைக்க அர்ச்சகர்கள் வேதமந்திரம் முழங்க, மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வர் திருக்கல்யாண வைபவம் காலை 8 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனோ நெறிமுறைகளுக்கு உட்பட்டு கலந்துகொண்ட பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் சரண முழக்கங்களை எழுப்பி, இறைவனையும், இறைவியையும் மனமுருக வழிபட்டனர்.

திருக்கல்யாணத்தை www.maduraimeenakshi.org, என்ற முகவரி மூலம் காணலாம்.

திருக்கல்யாண அலங்காரத்துடன் அம்மன், சுவாமியும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். .

இன்று பக்தர்கள் வழக்கம்போல் மதியம் 3:30 – மாலை 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

நாளை சட்டத்தேரன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரையும்,

ஏப்., 26 காலை 7:00 – 10:30 மணி, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 மணி – 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.b