Sat. Nov 23rd, 2024

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வாசையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நேரிட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ விபத்தின் காரணமாக மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள பிற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைணப்ப வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

அண்மையில் நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவு காரணமாக, 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது சோகத்தில் இருந்து மகாராஷ்டிரா மக்கள் விடுவிடுபதற்கு முன்பாக மற்றொரு துயர நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனோ நோய் பரவல் அச்சம் ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்க, இதுபோன்ற விபத்துகளும் மகாராஷ்டிரா மக்களை நிம்மியிழக்கச் செய்துள்ளது.