Mon. May 5th, 2025 11:51:17 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவரது மூத்த மகன் ஆஷிஸ்., இன்று காலை உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிரபல நாளிதழில் நிருபராக பணியாற்ற வந்த 34 வயதான ஆஷிஸ், கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டதையடுதது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தர். துரதிர்ஷ்டவசமான இந்த தகவலை, சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஷிஸ் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனோ தொற்று பாதிப்புக்கு சீதாராம் யெச்சூரிக்கு ஆளாகியுள்ளதால், அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

pj

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆஷிஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மகனின் பிரிவால் துயரற்று இருக்கும் சீதாராம் யெச்சூரி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இது மிகவும் கடினமான நேரம் என்றும் தனது இரங்கல் செய்தியில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.