தடுப்பூசி யின் விலையை மாற்றியமைத்து சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப் பட்டியல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
அதன் விவரம் இதோ…..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு இருப்பதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவிகிதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு வழங்கும் தடுப்பூசிகான விலை கடுமையாக உயர்த்தப்பட்டு ரூ. 400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான விலை ரூ. 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் விலை அறிவிப்பு அறிக்கையைப் பகிர்ந்து சுட்டுரையில் ராகுல் பதிவிட்டுள்ளது:
“நாட்டின் பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கான வாய்ப்பு. மத்திய அரசின் அநீதி.” இந்தப் பதிவுடன் தடுப்பூசியில் பாகுபாடு என்ற ஹேஷ்டேக்கையும் அவர் இணைத்துள்ளார்.
தடுப்பூசி குறித்த இதற்கு முந்தையப் பதிவில்,
“மத்திய அரசின் கரோனா தடுப்பூசி திட்டம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல. பொது மக்கள் வரிசையில் நிற்பார்கள், நிறைய பணத்தையும், உடல்நலத்தையும், வாழ்க்கையையும் தொலைப்பார்கள். இறுதியில் சில தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள்.”
இவ்வாறு ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்…