Sat. Nov 23rd, 2024
கொரோனோ தொற்றின் 2 வது அலை நாடு முழுவதும் அதிவேமாக பரவி வருவதையடுத்து, நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் நாள் ஒன்றுக்கு 5000 டன் தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐநாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேநிலை தொடர்ந்தால் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் (பிராண வாயு) வழங்குவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனோ தொற்று உச்சத்திற்கு சென்ற மாதங்களில் கூட நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு மட்டுமே அதிகரித்தது. அதாவது சராசரி நாள் ஒன்றுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், கொரோனோ தொற்று உச்சத்தை தொட்ட காலத்தில் நான்கு மடங்காக அதிகரித்து 2800 டன் ஆக்சிஜனை வைத்து சமாளிக்க முடிந்தது. 
ஆனால், 2 வது அலை வேகமாக பரவி வரும் தற்போதைய நிலையில், ஆக்சிஜன் தேவை ஏழு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 5000 டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கோவிட்டின் இரண்டாவது அலைகமத்தியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இது மிகவும் விரும்பப்பட்டதாக தொழில்துறை வீரர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 100 சதவிகித உற்பத்தியில் 60 சதவிகிதம் அளவுக்கு ஐநாக்ஸ் வாயு தயாரிப்பு நிறுவனம் உற்பத்தி செய்த வருகிறது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் சித்தார்த் ஜெயின், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது குறித்து கூறும் போது, கொரோனோ தொற்றுக்கான சிகிச்சையில் ஆக்சிஜன் தேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. நோய் கட்டுக்குள் கொண்டு வரப்படும் போது, ஆக்சிஜன் தேவையின் அளவும் குறைய வாய்ப்புள்ளது என்றார். 
மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவில் உற்பத்தி திறன் நன்றாக இருக்கிறது என்றும் அவர் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கூறினார். 

இதனிடையே, ஆக்சிஜன் விநியோகத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 
டெல்லிக்கு வழங்க வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்களை வேறு மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அனுப்பி வைத்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.