Sat. Nov 23rd, 2024
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் டாக்டர் ஜாகிர் உசேன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளிகள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் பணி இன்றும் நடைபெற்றது அப்போது, ஆக்சிஜன் (திரவ வாயு) கசிந்தது இதனால், நோயாளிகளுக்கு அனுப்பப்பட்ட ஆக்சிஜன் அளவு திடீரென்று குறைந்தது. 
இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உள்பட மற்ற பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு சுவாசக் காற்று பற்றாக்குறை ஏற்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 

நோயாளிகள் இறப்பு குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா அமைச்சர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், இதொரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். முதற்கட்ட தகவலின் படி, 11 பேர் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நோயாளிகள் இறப்பு குறித்து விரிவான அறிக்கையை, மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து கேட்டிருப்பதுடன், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 
நாசிக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நோயாளிகள் இறப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.