பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.45 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்..அதன் முக்கிய அம்சங்கள்:
மே 1ஆம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உச்ச திறனில் இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் பணியில் டாக்டர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் களைப்பின்றி பணியாற்றி வருகின்றனர். தொற்று நோய்க்கான சிகிச்சைக்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிஷ்டவசமாக நம்மிடம் மிக வலிமையான மருத்துவ கட்டமைப்பு உள்ளது. தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தொற்று நோய் பாதிப்பால் மக்கள் படும் துன்பம் எனக்கு மிகவும் வேதனை அளித்துள்ளது. ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சிக்கலான நேரத்தில் நாம் அனைவரும் பொறுமை இழக்காமல் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு இருந்ததை விட, தற்போது சூழ்நிலை வேறு விதமாக உள்ளது கடந்த ஆண்டு இருந்ததைவிட தடுப்பூசி உள்ளிட்ட நோய்த் தடுப்பு கட்டமைப்பு வலுவாக உள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் 50 சதவீதம் நேரடியாக மாநிலங்களுக்கு வினியோகம் செய்ய உள்ளது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை பூர்த்தி செய்துள்ளோம்-
மருத்துவ நிபுணர்களின் தொடர் உழைப்பால் கடந்தாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைத்தது.
இவர்களின் அசாதரண உழைப்பால் 2 தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரித்தது.
உலகத்தின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இரண்டு உள்நாட்டு தடுப்பூசி மருந்துகளுடன் இந்தியா துவங்கியுள்ளது.
உலகிலேயே நமது நாட்டில் குறைந்த விலையில் கரோனா தடுப்பூசி கிடைக்கிறது.
நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்;
தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும் –
கொரோனாவால் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகள் –
கொரோனாவின் 2வது அலை ஒரு புயல் போல நாடு முழுவதும் வீசி வருகிறது.
கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது –
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது தேவை கூட்டு முயற்சிதான் –
எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம் –
புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்..