Sat. Nov 23rd, 2024

கொரோனோ தொற்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை விட வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தைகளை அனுபவித்து வருபவர்கள், சாலையில் காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள்தான்.

கொரோனோ தொற்றின் 2 வது அலை உக்கிரமாக தாக்கி வரும் இந்த நேரத்தில், முகக் கவசம் அணிந்து செல்லுங்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள், தேவையற்ற பயணத்தை தவிருங்கள் என்று காவல்துறையினர், மனிதநேயத்தோடு வலியுறுத்தினாலும், பொதுமக்கள், குறிப்பாக இளம்தலைமுறையினர் அடங்குவதில்லை என்பதற்கு நாடு முழுவதும் நாடுதோறும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் உள்ளன.

அந்தவகையில், டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் வந்த இளம்தம்பதியினரிடம், முகக் கவசம் என்று காவலர்கள் ஒரு வார்த்தைதான் சொன்னார்கள். ஆனால், அதைக்கேட்டு ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார் அந்த இளம்மனைவி. நாகரிக மங்கையாக காட்சியளிக்கும் அவரின் வாயில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் நாராசமாக இருந்தது. காது கொடுத்து கேட்கவே முடியாதவை.

இளம்பெண்ணின் அடாவடித்தனம் பதிவு செய்யப்பட்ட வீடியோ, இந்தியாவை கடந்து உலக நாடுகள் முழுவதும் வைரலாக பரவி, இந்தியாவின் மானத்தை கப்பலேற்றி வருவதாக வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் கவலையோடு கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், டிவிட்டர்களில் பதிவேற்றியும், இன்றைய கல்வி, இளம்தலைமுறையினருக்கு அறிவையும் ஆழ்ந்து யோசித்து செயல்பட வேண்டிய ஆற்றலையும் தருவதற்கு பதிலாக, ஆணவத்தையும், அடாவடி குணத்தையும் அதிகமாக கற்று தருகிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர் கலாச்சார காவலர்கள்..

நாராசமாக பேசிய அந்த பெண்ணின் பேச்சின் சாராம்சம் இதோ…

மாஸ்க் ஏன் போடல…. போலீஸ்..

இளம்பெண் : நீ போய் சி.எம்.கிட்ட போய் சொல்லு.. பிரைம் மினிஸ்டருக்கிட்ட போய் சொல்லு…யார்கிட்ட வேணா போய் சொல்லு.நானெல்லாம் மாஸ்க் போட முடியாது. வீடியோ எடுக்கீறியோ எடுத்துக்கோ..உன் கண் முன்னாலேயே என் வீட்டுக்காரரை கிஸ் பண்றேன். அதையும் நீ பாக்கிறீயா..அதையும் வீடியோ எடுத்து எங்க வேண்டுமானாலும் போட்டுக்கோ..கிஸ் மட்டுமில்ல, என்ன வேணாலும் பண்ணுவேன். வீட்ல கணவரோடு எப்படியெல்லாம் செக்ஸ் வச்சுகுவேனோ, அதையும் கூட இங்கே செய்வேன். வீட்ல என்ன செய்யனும், வெளியே நான் என்ன செய்யனும்னு சொல்றதுங்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது. நான் என்ன பண்ணணும், பண்ணக் கூடாது என்று சொல்வதற்கு உனக்கு வெட்கமா இல்ல..

காரை ஓரம் கட்டிய போதும், ஏற்கெனவே பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறார் அந்த இளம்பெண். நானும் ஐஏஎஸ் ஐபிஎஸ் எக்ஸாம் எல்லாம் எழுதி இருக்கிறேன். போலீசாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெரியும் என்று கத்துகிறார்.

அவரின் அடாவடித்தனத்தைப் பார்த்து காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்ல, வேடிக்கைப் பார்த்து நின்று கொண்டிருந்த முகம் சுழித்தனர். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அந்த பெண்ணையும், அவருடன் வந்த அவரது கணவரையும் டெல்லி போலீசார் கைது செய்கின்றனர். எங்கிருந்து அழுத்தம் வந்ததோ தெரியவில்லை. கைது செய்த சில நிமிடங்களிலேயே இருவரையும் விடுதலை செய்து விடுகின்றனர்.

ஒரு நிமிடம் பொறுமையாக பதிலளித்து இருக்கலாம். இல்லையெனில் முகக் கவசத்தை எடுத்துஅணிந்திருக்கலாம். அதைவிடுத்து, அந்தப் பெண் பேசிய பேச்சும், முகத்தில் காட்டிய அலங்காரமும், காரில் வருபவர்கள் எல்லாம் சந்தமான இருப்பார்கள் என்று நம்பிவிடக் கூடாது. சாக்கடையும் கூட நாகரிமாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு டெல்லி இளம்தம்பதிகளின் நடவடிக்கைகள் உதாரணமாக இருக்கின்றன….

போலீஸ் விசாரணையில் காரில் வந்த தம்பதியர்கள் இருவரும் பட்டேல் நகரைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் அபஹ என்று தெரியவந்தது.  

போலீஸ்தான் பாத்து சூதனமாக நடந்து கொள்ள வேண்டும் போல….