நாடு முழுவதும் கொரோனோ தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னணி மருத்துவர்கள் மற்றும் அதிக திறன்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
கொரோனோ தொற்று அதிகமாக பரவும் மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துதால், சிகிச்சைகளை விரைவுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைகளை வழங்கினார்.
கொரோனோ தொற்று அதிகமாக உள்ள நகரங்களில் பணிபுரியும் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன், கொரோனோ நெறிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து கொள்ளும் வகையில் காணொலி வழியாக அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குமாறும் மருத்துவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
COVID-19 தாக்கம் மற்றும் தடுப்பூசி முன்னேற்றம் குறித்த வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் உரையாடிய பிரதமர், COVID சிகிச்சை மற்றும் தடுப்பு குறித்த பல வதந்திகளுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இந்த கடினமான காலங்களில் மக்கள் பீதிக்கு ஆளாகாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.