எவ்வளவு வெள்ளந்தி மனிதர்…. தடுப்பூசி போட்ட 48 மணிநேரத்திற்குள் உயிரிழந்துள்ளார். நாள்தோறும் அதிகாலையில் 15 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் சென்று உடற்பயிற்சி செய்யும் நடிகர் விவேக்கிற்கு, இருதய நாளங்களில் 100 சதவிகிதம் அடைப்பு இருந்திருக்கிறது என்று மருத்துவத்துறை தகவல் பரப்புகிறது… அரசுக்கு விழிப்புணர்வு தூதுவராக பயன்பட்ட நடிகர் விவேக் இன்று உயிரோடு இல்லை. தடுப்பூசி மீதான சந்தேகம் எழுவதை எப்படி புறக்கணிக்க முடியும்? தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை வாரி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் சாமான்ய மனிதர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்?