Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் அளவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள்ளனர்.

இன்று சிகிச்சைப் பலனின்றி தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 12,821 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் போல பல மாநிலங்களில் கொரோனோ தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், கொரோனா தடுப்பூசி முகாம்களை பணியிடங்களில் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் 100 பேருக்கு மேல் இருந்தால், தடுப்பூசி முகாம்களை அமைத்து, அவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால், அதிகமான மக்களுக்கு தடுப்பூசி எளிதாக போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலவச தரிசனம் ரத்து

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருப்பதி திருமலை கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதுடன், 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும். நாளொன்றுக்கு 300 ரூபாய் கட்டணத்தில் சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.