கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஐ.பி.எஸ்.மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ், திமுக.வினரை தரக்குறைவாக பேசினார். அப்போது அவர்,
கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஒருமையில் அழைத்துப் பேசிய அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஐ.பி.எஸ்., உன்னைவிட பலமடங்கு கிரிமினல்களை எல்லாம் கர்நாடகாவில் பார்த்துவிட்டுதான் நான் இங்கு வந்திருக்கிறேன் என கடுமையாக பேசியுள்ளார்.
அவரின் பேச்சு குறித்து திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது நிலையில், அரவக்குறிச்சி பாஜக.வினரிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.