Sat. Apr 27th, 2024

மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனசாட்சி இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை இன்று பாஜக மேற்கொண்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டே இரண்டு அக்யூஸ்ட்டுகள்தான் உள்ளனர். ஒன்று அய்யா பிரதமர் மோடி. மற்றொன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா. மவனே இரண்டு பேரும் கண்ணில் விரலை விட்டு ஆட்டி விடுவார்கள் என்று பேசினார்.

இந்த பேச்சிற்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்ல சமூக சேவகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய கே.அண்ணாமலை அரசியல், சுய லாபத்துக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தவில்லை; ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அதனை ஜிஎஸ்டி வரிக்குகள் கொண்டு வர முயற்சிப்பதாகவும் ஆனால் தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய கே.அண்ணாமலை, சிவசேனா, திமுக… இரண்டும் வேறு வேறு கட்சிகள் தானே? மகாராஷ்டிராவில் பால்தாக்கரேவின் 3வது மகன் உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார்; கருணாநிதியின் 3வது மகன் ஸ்டாலின் முதலமைச்சரானார். உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா இளைஞரணி நிர்வாகி; ஸ்டாலினின் மகன் உதயநிதி இளைஞரணி நிர்வாகி… பார்ப்போம் என்றும் கூறினார்.

இதேபோல் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.