Fri. Mar 29th, 2024

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தியாகராயநகர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா சத்துப்பொருட்கள் தொகுப்பு தற்போதைய திமுக ஆட்சியில் வெறுமனவே சத்துப்பொருட்கள் தொகுப்பாக மாறியிருக்கிறது. அதில் Pro pl health mix எனும் பொருள் தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. ஆனால், ஆவின் நிறுவன தயாரிப்பான
health mix பயன்படுத்தலாம் என துறை அதிகாரிகள் மற்றும் திட்டக் குழுவினர் கடந்த மார்ச்
மாதமே பரிந்துரை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கர்ப்பிணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு 23 லட்சத்து 88 ஆயிரம் கிட்களை தமிழக அரசு
வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள்
வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட் நிறுவனத்திற்கு ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம்
வழங்கப்பட்டுள்ளது. உயிருக்கே அச்சம் தரும் பொங்கல் தொகுப்பை வழங்கியது இந்த
நிறுவனம்தான்.

ஆவினுக்கு வழங்காமல் pro pl health mix க்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக
அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருட்களை தனியார் நிறுவனத்தில் வாங்கியதில் தமிழக அரசுக்கு மொத்தம் 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. G square முன்னேற்றக் கழகமாக சென்னை cmda மாறி உள்ளது. நிலத்தை பதிவு செய்வதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. இதற்காக இடைவெளியில் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் ஒரு நிலத்திற்கான அனைத்து ஆய்வுகளும், அறிக்கைகளும் தயாரித்து முடித்து அரசின் அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு g square நிறுவனம் பல்வேறு திட்டங்களுக்கு விரைவாக அரசின் அனுமதி பெற்று செயல்படுத்தி வருகிறது. கோவையில் 122 ஏக்கர்களுக்கான லே அவுட் 8 நாளிலே பெற்றுள்ளனர். இதேபோல நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குறைந்த நாட்களிலும் அனுமதி பெற்றுள்ளது. ஈஞ்சம்பாக்கம் உள்பட 15 ஊர்களில் உள்ள மிகப்பெரிய திட்டங்களுக்கு குறைந்தநாட்களிலேயே ஜி ஸ்கொயர் நிறுவனம் பெற்றுள்ளது.
இவ்வளவு விரைவாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது நிலங்களுக்கு அரசின் அனுமதி பெறுவதற்கு வசதியாக அரசின் இணையத்தளம் பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் போல பிற பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.
சிஎம்டிஏ அமைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி திமுக குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். ஜி ஸ்கொயர் புதிதாக 6 கம்பெனிகளை துவக்கியுள்ளது. இந்த நிறுவனங்களில் முதல்வரின் மருமகன், மகள் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிறுவனங்கள் பெங்களுர், ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் இவர்கள் தொழிலை துவக்கியுள்ளனர்.

திமுகவிற்கு , முன்னர் 2g முடிவுரை எழுதியது போல , தற்போது g square என்ன
செய்யப் போகிறது என காத்திருந்து பார்க்க வேண்டும். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டும் விரைவாக அரசின் அனுமதி பெற்றது தொடர்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர், முதல் அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.

இம்மாதம் 20 ஆம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல் , சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம்.
தமிழகத்தில் இருந்து தேர்வாகும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். 42 பேர்தான் தேர்வாகியுள்ளனர் என்பதை ஏற்க முடியாது.

அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது.
அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம். அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. எங்களது கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் ஓபிஎஸ் , இபிஎஸ் அதை ஏற்க மாட்டார்கள்.

சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல , பாஜகவை முதலிடம் கொண்டுவர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும் என்றார் அண்ணாமலை.