Fri. Apr 19th, 2024

கோயில் திருப்பணிக்காக திரட்டப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதியை மோசடி செய்துவிட்டார் என்ற புகாரின் பேரில் பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டரில், ஆவடி போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

நன்கொடை திரட்டி கோயில் திருப்பணியில் ஈடுபடவிருந்த விஹெச் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 க்கு எதிராக காவல்துறையினர் குற்றம் இழைத்து விட்டதாகவும், அதன் காரணமாக ஆவடி காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், கார்த்திக் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், வழக்கம்போல் அறிவாலயம் அழுத்தத்தில் இருக்கும் போது மிரட்டும் உத்திகளைக் கையாள்கிறது. கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக
முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அது மட்டுமன்றி, இந்த அரசாங்கம் எந்த நிலைக்கும் சென்று ஒரு ஜீரணிக்கமுடியாத குரலை அடக்கப் போகிறது என்பதையும் காட்டுகிறது.

கார்த்திக்கின் தந்தையிடம் பேசியபோது, இந்த தேசியவாதியின் பின்னால் தமிழ்நாடு பாஜக நிற்கும் என்றும் கட்சியின் சட்டக் குழு அவருக்கு ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளதாக கே.அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கதில் கூறியுள்ளதாவது: