Sun. Apr 20th, 2025

மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பாஜக அதிமுக. வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

தென் தமிழகத்துடன் எம்.ஜி.ஆருக்கு சிறப்பான தொடர்பு இருந்தது. அதுவும் குறிப்பாக மதுரை நகரத்தோடு எம்.ஜி.ஆரின் நினைவுகள் ஒன்றி பிணைந்திருக்கின்றன. மதுரை வீரன் திரைப்படத்தை யாராலயும் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர் ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசுதான் கலைத்தது.

அவரது தொலைநோக்குப் பார்வையால் நாங்கள் ஈர்க்கப்பட்டு, அவரது கனவுகளை நிறைவேற்ற உழைப்போம்.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். கூடுதலாக மேலும் பல வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் மதுரை நகரில் நிறைவேற்றப்படவுள்ளது.

அடிப்படை கட்டமைப்பு, நீர்பாசானம், முதலீடு ஆகிய மூன்று பிரிவுகளில் மதுரை மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவாக திட்டங்கள் தொடங்கும்.

இணையத்தள தொடர்பு மூலம் எல்லா கிராமங்களையும் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் திமுக.வுக்கு எந்தவொரு வளர்ச்சி குறிக்கோளும் கிடையாது. முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தனர். அப்போது அந்த அமைச்சரவையில், திமுக முக்கியமான மத்திய அமைச்சர்களைப் பெற்றிருந்த போதும், அதனை எதிர்க்கவில்லை.

அவர்களா, தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை பாதுகாக்கப் போகிறார்கள். மத்திய பாஜக தலைமையிலான அரசுதான், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மீண்டும் அனுமதி வழங்கியது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் அவசர சட்டத்தை நிறைவேற்றியது மத்திய பாஜக அரசுதான் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.