Fri. Nov 22nd, 2024

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலையில் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்தார். முன்னதாக,
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்தா சுவாமிகள் தேவஸ்தானத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து அவர், திருக்கோவிலூரில நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அமித்ஷா, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் VAT.கலிவரதன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவரின் பரப்புரை விவரம் இதோ…….

தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் தாயாருக்கு எதிராக தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளனர். பெண்களுக்கு மரியாதை வழங்க தெரியாத திமுக.வுக்கு தமிழக மக்கள், தாய்மார்கள், சகோதரிகள் வரும் 6 ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார். .