உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உரையாற்றிய அவர், காங்கிரஸ் திமுக கூட்டணியினர், பெண்களை மரியாதை நடத்தாமல் அவமரியாதை செய்கின்றனர். மேலும்,அவர்களுக்கு எதிராக இழிவான மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். பெண்களை மதிக்க தெரியாதவர்கள், ஆட்சிகு வருவதற்கு உரிமை கோர முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த முதல்வர், வானதி சீனிவாசனை ஆதரித்து நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தனர்.
இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்ற பெண்கள் உள்ளிட்ட பாஜக.வினர் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். கோவை கடை வீதி வழியாக பேரணி சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையோரம் இருந்த கடை ஒன்றின் மீது கல்லெறித்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் முனைந்து செயல்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு அமைதிப்படுத்தினர். அந்த பகுதியில் பொறுத்தப்பட்டள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் கல்லெறிந்த நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு சமுதாய மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்பகுதியில் உள்ள லூத்தரன் கிறிஸ்துநாதர் ஆலயத்தினர் பெருமகிழ்ச்சியுடன் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஸ்ரீ நாராயண குருதேவர் மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்ற வானதி சீனிவாசன், பின்னர், தமிழ்நாடு ஈழவர் திய்யா சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரியதுடன் அவர்களுடன் தொகுதி வளர்ச்சி தொடர்பான அம்சங்கள் குறித்து கலந்துரையாடினார்.