Sat. May 18th, 2024

சிறப்புக் கட்டுரை கே.எஸ்.ராதாகிருஷ்ஷன்… சிறந்த அரசியல்வாதி…



நாட்டில் 30 நதிகளை இணைப்பது என்று நீர்வளத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது 16 நதிகள், அதாவது தீபகற்ப இந்தியா சோட்டா- நாக்பூர் பீடபூமி , தக்காண பீடபூமி, தமிழ்நாடு, கேரளம் பகுதிகளாகும். வடபுலத்தில் இமயமலையில் 14 நதிகள் இணைக்கப்படுகிறது. இது ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த தேசிய நதி கங்கை குமரியை தொடவேண்டும் என்ற வழக்கில் 2012 பிப்ரவரி 27-ந் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான். மகிழ்ச்சி. அதன் பின் நவலவாலா குழு அமைத்து என்னுடைய வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,இதன்மூலம், நாட்டின் தண்ணீர் பிரச்சினை தீரும் என மத்திய அரசு கருதுகிறது. இதற்கு உதாரணமாக, உத்தரபிரதேசத்தின் புந்தேல்கண்டில் ஓடும் கேன், பேத்வா நதிகள் இணைப்பு சுட்டிக் காட்டப்படுகிறது.

‘‘மத்திய ஜல் சக்தித்துறையின் சார்பில் கேன், பேத்வா நதிகள்இணைப்பு திட்டம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள புந்தேல்கண்டின் வறட்சி முடிவிற்கு வரும். 21-ம் நூற்றாண்டில் நீர்வளம் நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும். இதனால், நாம் தற்போதைய பிரச்சனைகளை தீர்ப்பதுடன் வரும் காலங்களிலும் பிரச்சினைகள் வராமல் திட்டமிட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

இமயமலையில் உருவாகி கங்கை, சிந்து சமவெளியில் பல ஆறுகள் உருண்டோடுகின்றன. இவற்றில் பலவும் வருடத்தின் 365 நாட்களும் நீர் நிரம்பி வளமையாக உள்ளன. மழைக்காலங்களில் இவற்றின் அணைகளிலிருந்து அதிக அளவிலான நீர் திறந்துவிடப்பட்டு கடலில் கலந்து வீணாகிறது. இந்தவகையில் உத்தரபிரதேசத்தின் புந்தேல் கண்டின் லலித்பூரின் பேத்வா நதியின் ராஜ்காட், மாதா டீலா எனும் இரண்டு அணைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் கன அடிகளுக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இவையும் கங்கையில் இணைந்து ஓடி கடலில் கலந்து வீணாகி வருகின்றன.

‘புந்தேல்கண்டின் நிலப் பகுதி கடினப் பாறைகள் நிறைந்தது. இதனால்,இங்கு பெய்யும் மழையினாலும், ஓடும் நதிகளாலும் நிலத்தடி நீர் உயர்வதில்லை. இவை பாறைகளுக்கு இடையே உள்ள மிகச்சில பிளவுப் பகுதிகளில் மட்டும் தங்குகின்றன.

ஓடும் முக்கிய ஆறுகளான கேன், பேத்வா இணைப்பதால் புந்தேல்கண்டில் உள்ள ஆயிரக்கணக்கான குளங்கள் நிரம்பி தண்ணீர் பிரச்சினை தீரும் வாய்ப்புகள் உள்ளன. இக்குளங்கள், கி.பி 9 முதல் 13-ம் நூற்றாண்டு வரையில் ஆண்ட சந்தேளர்களின் ஆட்சியில் மழைநீரை சேமிக்க வெட்டப்பட்டவை’ எனத் தெரி வித்தார்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். அதன் பின்பு நதிநீர் இணைப்பு குறித்து மேல் நடவடிக்கைகள் மத்திய அரசு எடுக்கவில்லை. 1998-ல் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்ற பின் தேசிய நதிகள் இணைப்பு திரும்பவும் உயிர் பெற்றது. சுரேஷ் பிரபு தலைமையில் தேசிய நதிகள் உயர்மட்ட குழு அமைத்து, அதன் அறிக்கை வழங்கவேண்டிய நேரத்தில் வாஜ்பாய் அரசின் காலம் முடிந்தது. அப்போது சுரேஷ் பிரபு கமிட்டியின் அறிக்கையும், என்வழக்கின்மூலம்உச்சநீதிமன்றத்திற்கு கவனித்திற்கு கொண்டுவந்தேன்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசு இருந்தது. உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் அரசின் வழக்கறிஞரும் இது குறித்து உறுதியளித்தார். அவர் சொன்னது போல நடக்கவில்லை. திரும்பவும் இப்போது நதிநீர் இணைப்பு வேகமெடுத்துள்ளது என்பது ஆறுதல் செய்தி.