Thu. Nov 21st, 2024

வட இந்திய தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தின் போது இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தரம் தாழ்ந்து கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர் உள்ளிட்ட மதசார்ப்பற்ற மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுபுர் சர்மாவின் கடுமையான விமர்சனத்திற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே நுபுர் சர்மாவின் விமர்சனத்திற்கு ஆதரவாக பாஜகவினரும் பல்வேறு நகரங்களில் ஆதரவு பேரணி நடத்தினர். இந்நிலையில், தனக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று நுபுர் சர்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விசாரனை இன்று நடைபெற்ற போது உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வழங்கிய அறிவுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள்:

நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி காவல்தறை என்ன நடவடிக்கை எடுத்தது ?.நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா. அவர் நடந்து கொண்ட விதமும் அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கோனது.

ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்றால், எதுவேண்மானாலும் சொல்வதற்கு உரிமை இல்லை. நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை திரும்ப பெற்றது என்பது காலம் தாழ்த்திய செயல். அவர் தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிகப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்?

உதய்பூரில் தையல்காரர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான். நாட்டில் தற்போது நடப்பதற்கு நுபுர் சர்மாவே பொறுப்பு. நுபுர் சர்மாவும் அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் நீக்கிரையாக்கிவிட்டது. நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது ஜனநாயக நாடுதான். இங்கே பேச்சுரிமையும் இருக்கிறது. தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆனையால் அனைத்து வழககுகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. வேலும் எந்தவொரு பரிகாரத்தையும் தேட டெல்லி உயர்நீதிமன்றத்தை நுபுர் சர்மா அணுக வேண்டும்.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது கருத்துகளை அழுத்தமாக தெரிவித்துள்ளது.