Thu. Nov 21st, 2024

மேற்கு வங்காளத்தில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட புகழ் பெற்ற நடிகை, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மூத்த பா.ஜ.க. தலைவர்களுககும் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ஆவேசமாக கூறியுள்ளார்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று பிரபல நடிகை பமேலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 100 கிராம் கோகேன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று 100 கிராம் #கொகேனுடன் பிடிபட்ட அந்த நடிகை, கடந்த 2019 ஆம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து, மேற்கு வங்கால பாஜக இளைஞரணி யுவ மோர்ச்சா நிர்வாகியாவும் #பமேலா_கோஸ்வாமி நியமிக்கப்பட்டனர்.

விசாரணைக்கு அழைத்து செல்லும் போது, அவர் ஆவேசமாக கூக்குரலிட்டார்.

“என்னை மட்டும் ஏன் கைது செய்கின்றீர்கள்…பாஜகவின் மேற்கு வங்காள தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் முக்கிய உதவியாளர் ராகேஷ் சிங்கையும் கைது செய்யுங்கள்…நான் வெறும் அம்பு தான்… முக்கிய குற்றவாளி ராகேஷ் தான் என்று அவர் கூறியுள்ளார். அவரின் அந்த கூக்குரல் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி, கொல்கத்தா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைஅகற்றிவிட்டு, பா.ஜ.க. ஆட்சி அமைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.

அதன் எதிரொலியாக, திரிணாமூல் காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் வரிசையாக இணைந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில், பாஜக மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் விதமாக, அக்கட்சியைச் சேர்ந்த நடிகை பமேலாவை கைது செய்து மேற்கு வங்க காவல்துறை அதிரடி காட்டியிருக்கிறது.