Sat. Apr 20th, 2024

தமிழக பாஜகவில் 8 மாவட்ட தலைவர்களின் பதவியை பறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி காட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜகவின் பலத்தை அறிந்து கொள்ளும் வகையில், மேலிட தலைவர்களின் அனுமதியோடு அதிமுக கூட்டணில் இருந்து விலகி, தனித்து போட்டியிட செய்தார், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை.

திமுக தலைமையிலான மெகா கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக,பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என பலமுனைப் போட்டியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏறக்குறைய பாதி இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடும் போட்டிக்கு இடையே, திமுக கூட்டணி, அதிமுகவுக்கு அடுத்து ஒட்டுமொத்தமாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் 6 சதவீத அளவுக்கு பாஜக வாக்குகளை பெற்றதையடுத்து, அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் தமிழக பாஜகவால் தனித்துப் போட்டியிட முடியும் என்று தமிழகத்தில் நிரூபித்துள்ள பாஜக, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, இப்போதிருந்தே கட்சியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை எடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கலந்து ஆலோசித்தார் கே.அண்ணாமலை. அப்போது, தமிழகத்தில் கிராமப் புறங்களில் பாஜகவுக்க வலுலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கூறப்பட்ட அறிவுரையை ஏற்று, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் கே.அண்ணாமலை.

இந்நிலையில், தமிழக பாஜகவில் தற்போதைய நிலையில் உள்ள தலைவர்கள், நிதிர்வாகிகள், அணிகள், மண்டல கமிட்டிகள் என அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுவதாக கே.அண்ணாமலை அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு முழுமையாக கலைக்கப்படுவதாக தெரிவித்துள்ள கே.அண்ணாமலை அறிவிப்பு, சென்னை உள்பட 8 மாவட்ட தலைவர்களின் பதவிகளையும் பறித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் இதோ……..

https://fb.watch/byhxeC4btp/