Fri. Apr 4th, 2025

தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக கல்வித்தரம் உயர்வுக்கு கிறிஸ்தவ பள்ளிகள் முக்கிய காரணம். அவரவர் மதம் அவரவருக்கு பெரிது. மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து 600 பேர் வரை சென்றுவந்த நிலையில் இனி 1,000 ஆக உயர்த்தப்படும்.

தேர்தலில் கூட்டணி மாறும், ஆனால் கொள்கைகள் மாறாது. எனவே, சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை/

சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது/

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

அரசுக்கு சொந்தமான நிலத்தில் கிறிஸ்தவ கல்லறை அமைக்க இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.