Sat. May 18th, 2024

தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். திருச்செந்தூரில் காலையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அததன் விவரம்…

ஏழை மக்கள் முன்னேற்றம் பெற வேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற கட்சி, அ.தி.மு.க. ஏழை எளிய மக்களுக்கு பாடுபடுவதற்காக புதிய புதிய திட்டங்களை அம்மா அரசு செயல்படுத்தி வருகிறது. எல்லா இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க முடியாத நிலையில், அங்கெல்லாம் அம்மா மினி கிளினிங் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 2000 மினி கிளினிங் செயல்பட்டு வருவதாகவும் அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் மருத்துவப் பரிசோதனை பெற்று வருதாகவும் கூறினார். இதுபோன்ற ஒரு மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ல்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது மக்களை சந்திக்காத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக ஊர் ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. அரசுக்கு எதிராக பச்சை பொய்களை கூறி வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்