Fri. May 17th, 2024

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.. அவரின் தியானத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் போற்றும் வகையிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் இன்று அவருக்கு மரியாதை செலுத்திய வருகின்றனர்..

டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகின்றது.

1891 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் மாஹூ என்ற பகுதியில் பீமாராவ் அம்பேத்கர் பிறந்தார்.

தாழ்த்தப்‌பட்ட மக்களின் முன்னேற்றத்தை மூச்சாகக் கொண்டு கல்வி கற்ற அம்பேத்கர், வெளிநாட்டில் சட்டம், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்‌டம் பெற்றார். 

நசுக்கப்பட்டவர்களின் நாயகனாக இருந்த அம்பேத்கர், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் உலகமே வியக்கும் வகையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக உரையாற்றினார்.‌‌ 

அபரிமிதமான அறிவாற்றல் கொண்டவராக இ‌ருந்ததா‌ல்‌ சுதந்தி‌ர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார் அம்பேத்கர்.

அல்லும் பகலும் உழைத்து நாடே போற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

8 அட்டவணைகளை கொண்ட இந்தச் சட்டம், 1949ஆம் ஆண்டு ‌நவம்பர் 26 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

முதல்வர் மரியாதை + நினைவேந்தல் உறுதிமொழி

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்…

வைகோ- திமுக எம்பிக்கள் மரியாதை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்….

One thought on “புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள்: தலைவர்கள் மரியாதை….”

Comments are closed.