தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், அனைத்து துறை செயலாளர்களுக்கு அலுவல் ரீதியாக அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியானதையடுத்து, ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், அலுவல் ரீதியாக எழுதிய கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியல்ல என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ: