கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவையொட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் மறைவையொட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக பொறுப்பு ஏற்ற நாள் முதலாக இலக்கிய துறைக்கு நந்தலாலா ஆற்றிய பங்களிப்பு மகத்துவம் வாய்ந்தது என்று புகழாரம் சூட்டுகிறார்கள் அவரது சமகால பிரபல கவிஞர்கள்…
