Thu. May 2nd, 2024

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வர் தேர்வு இன்று நடைபெற்றது.. இதற்காக பாஜக எம்எல்ஏ. க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பூபிந்தர் படேல் தேர்வு செய்யப்பட்டார்..

2017 ஆம் ஆண்டு கட்லோதியா தொகுதியில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் வேட்பாளரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர்.. குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி சென் ஆதரவாளர் இவர் என்று கூறப்படுகிறது.. இதுவரை அமைச்சராக பதவி வகிக்காத இவர் நேரடியாக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் பதவி வகிக்காமல் நேரடியாக குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது நினைவுக்கூரத்தக்கது..

நாளை புதிய அரசு பதவி ஏற்கும் என பாரதிய ஜனதாக் கட்சித் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது…