Sun. Apr 28th, 2024

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது.  உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்தது.

உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் தேசிய அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.  இதனருகே ஏற்பட்ட இந்த வெள்ளபெருக்கால், தொழிலாளர்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி கொண்டனர்.  ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த பேரிழவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி, உத்தரகாண்ட் பனிச்சரிவு விபத்து பற்றி மாநில முதல் அமைச்சர் ராவத்திடம் 2 முறை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து உள்ளார்.  அரசால் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ராவத்திடம் உறுதி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், உத்தரகாண்டின் சமோலி பகுதியில் பனிச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கவும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என தெரிவித்து உள்ளது.

125 பேர் மாயம : ரூ- 4 கோடி இழப்பீடு

இதனிடைய உத்தரகான்ட் மாநில முதல்வர் ராவத் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:

ராவத், உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படும்.  பனிச்சரிவு ஏற்பட்டதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்குவார்கள்.
ஆனால், எனது அரசு மக்களை காக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது.  180 செம்மறியாடுகள் மற்றும் ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.  அவர்களுடன் ஆடு மேய்ப்பவர்கள் உள்பட 5 உள்ளூர்வாசிகளும் அடித்து செல்லப்பட்டு விட்டனர்.
125 பேரை காணவில்லை என எங்களுக்கு தெரிய வந்துள்ளது.  இந்த எண்ணிக்கை உயரலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.