Sat. Nov 23rd, 2024

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி ரமணா வேதனையுடன் கூறியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி மீதான மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தீர்ப்பாயத்தில் சில நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதுன், காலிபணியிடங்கள் நிரப்பப்படும் பணியும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தீர்ப்பாயங்களில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறுபடுவதற்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா? என கேள் எழுப்பினர்.அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் எதுவும் பதிலளிக்காததால், தலைமை நீதிபதி அதிருப்தியடைந்தார். அப்போது அவர் கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தின் பொறுமையை மத்திய அரசு சோதித்துப் பார்க்கிறது. தீர்ப்பாயங்களை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை எனில் அது தொடர்பான சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்து விட வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இதுபோன்ற செயல்களின் மூலம் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு சோதித்துப் பார்ப்பதை போலதான் தெரிய வருகிறது.

இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.