Sat. Apr 27th, 2024

டி.பி.ஆர் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆணைய கூட்டத்தில் விவாவாதிக்கக் கூடாது என தமிழக அரசு வாதம் புரிந்துள்ளது..

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையர் கூட்டம் தில்லியில் இன்று நடந்தது.. தமிழகம், கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

புதுச்சேரி அரசும் எதிர்ப்பு

தமிழக அரசு. மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்க மட்டோம் என்றும் அதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக காணொலி வாயிலாக கலந்து கொண்ட புதுவை மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வாதம்

உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி நீர் பங்கீட்டை கர்நாடகா அரசு கொடுக்கவில்லை. தற்போது வரையில் 30.6 டி.எம்.சி நீர் நிலுவையில் உள்ளது – தமிழகம் தரப்பு.
எனவே அதனை திறந்து விட உத்தரவிடு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட கர்நாடக அதிகாரிகள்,
கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகக் கூட காவிரியில் சுமார் 14ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதற்கு தமிழகம் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்த காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன்,

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதாலும், கபினி, கிருஷ்ணராஜசேகர் ஆகிய அணைகள் கர்நாடகாவில் வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி தான் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது உபரியில் தான் கணக்கிடப்படும். அதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீர் பங்கீட்டை கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டும். அதாவது இன்றைய நிலவரப்படி ஆகஸ்ட் மாதத்தோடு சேர்த்து மொத்தம் 30.6 டி.எம்.சி அளவிற்கு தமிழகத்திற்கு கர்நாடகா நீர் தர வேண்டிய பாக்கி உள்ளது என காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டு வரப்படுகிறது.