Sat. Apr 27th, 2024

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ரவிக்குமார், பி.வி.நரசிம்மாவும் பதவியேற்று கொண்டனர்..

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்ட நீதியரசர் ரஎம்.எம்.சுந்தரேஷ் அவர்களை,

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் திரு I.S.இன்பதுரை, புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேற்று மாலை நேரில் சந்தித்த பூங்கொத்து வழங்கி இன்முகத்துடன் வாழ்த்து தெரிவித்தார்…

உச்சநீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் பதவியேற்று கொண்டனர்.‌ உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதன்முறை…!!

தலைமை நீதிபதியுடன் பெண் நீதிபதிகள்.. மூத்த நீதிபதி பானுமதி அவர்களுடன் நான்கு நீதிபதிகளாக அதிகரிப்பு…