Thu. Apr 10th, 2025

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்தவர், தமிழக அரசு பணிக்கு சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்..

நாளை காலை 7 மணிக்கு (திங்கள் கிழமை)பதவியேற்கிறார்

தலைமை செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதை அடுத்து ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
ஏற்கெனவே நல்லரசு சுட்டி காட்டியபடி கே.சண்முகத்தை சேேவையை இழக்க விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு பெற்ற கே. சண்முகத்தை தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது..

தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது..

நாளை முதல் புதிய பொறுப்பை கே.சண்முகம் ஏற்றுக்கொள்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளது..

சண்முகத்திற்கு மாதம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் என்றும் இது

ஓராண்டுக்கான தற்காலிக பதவி என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது