Mon. Apr 29th, 2024

கலங்கிய மனங்களை ஆறுதல்படுத்தி ஆன்மீக சக்தியை ஊட்டுவிக்கும் மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமியின் அற்புதம்…

ஆலயங்கள் தோறும் பக்தர்களின் முழக்கங்களும் வேண்டுதல்களும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு பாலமாகவும் உரமாகவும் அமைகின்றன..ஆலயம் சென்றோம், கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தோம் என்ற நிம்மதியுடன் இல்லம் திரும்புவது பக்தர்களின் அன்றாட வழிபாட்டு முறையாகும்..
எல்லாம் வல்ல இறையருளால் மனம் நிம்மதியடைந்து புதிய உற்சாகத்துடன் அன்றாாட பணிகளைை துவங்குவது எல்லோர் வாழ்விலும் நடக்கும்..ஆனால் குரு அருள் பரிபூரணமாக கிடைக்க,எதிர்கால பிரச்னைகள் எல்லாம் பனி போல விலக வைக்கிற புண்ணிய பூமியாக திகழ்கிறது, பாட்டூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோயில்.

.புரவிபாளைையம் கோடி சுவாமிகளின் சூட்சும அவதாரமாகி 13 வது ஜோதிர்லிங்கம் அருளாசி வழங்கும் பாட்டூர் ஆலயத்தை நிர்மாணித்து ஆட்சி புரிந்து வரும் அவதார புருஷர் மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமிகள் என்று நெகிழ்கிறார்கள் பக்தர்கள்..


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னப்பமலை பாட்டூரில் இயற்கை எழில் கொஞ்ச காட்சியளிக்கிறது சித்தரின் தெய்வீகப் பூமி..உலக நன்மைக்காகவும் அறநெறியில் வாழ்வை எதிர்நோக்கும் மக்களின் துன்பம் நீங்கி இன்பம் பொங்க இடைவிடாது தவ வேள்வியில் மூழ்கி அவதாரமாக காட்சியளிக்கிறார் மஹா சித்தர் கோடி தாத்தா ஸ்வாமிகள்..

கொரோனோ கட்டுப்பாடுகள் நீங்கியவுடன் மனத்துயரையெல்லாம் மஹாகுருவின் பாதங்களில் சமர்ப்பிக்க நூற்றுக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று பாட்டூர் ஆலயத்தில் குவிந்தனர்.. காலையில் ஜோதிர்லிங்கம் அபிஷேக ஆராதனை சிறப்புற நடைபெற்றது..
தொடர்ந்து சித்தர் சுவாமிகள், ஆடலரசர் நடராஜர் சுவாமிக்கு தெய்வீக மந்திரங்களை உச்சரித்து சிறப்புற ஆராதனை செய்துவித்தார்..

ஒருசேர ஆடலரசனின் ஆனந்த தாண்டவத்தை மனக்கண்களிலும் குருவின் ஆராதனையையும் மனமுருக தரிசித்தனர்.பக்தர்கள்.

இறையருளை அனுபவதித்த ஆனந்தத்தில் மூழ்கியிருந்த பக்தர்களை தனித்தனியாக பாத பூஜைக்கு அனுமதித்து அருளாசி வழங்கினார், மஹா சித்தர்.. மனப்பாரம் குறைய, தெய்வாம்சத்தில் திளைத்து வந்த பக்தர்களள், அருள்வாக்கை உள்ளத்தில் ஏந்தி மஹா சித்தர் கோடி தாத்தாவிடம் சரணாகதி அடைந்தனர் ..
உள்ளத்தில் எழுந்த புதிய நம்பிக்கை ஒளி உடலை கம்பீரமாக்க, அறுசுவையுடன் வழங்கிய அன்னதானமும் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது என்று நெகிழ்கிறார்கள் பக்தர்கள்..