Mon. Apr 29th, 2024

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள தேர்தல் பரப்புரை இன்று 2 வது நாளாக வேலூர் மாவட்டத்தில்ல இரண்டு இடங்களில் நடைபெற்றது. காலையில், பள்ளிகொண்டா அருகில் நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து, கந்தனேரியில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி யில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றுக்கு பதிலளித்து தொடர்ந்து உரையாற்றினார்.

அப்போது அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை என கூறிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விழாவில், பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டன்ர்.