Sun. Apr 28th, 2024

இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.ஜ.க, தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா மதுரையில் சனிக்கிழமை இரவு (30,01,20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்த ஜே.பி.,நட்டா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சட்டை அணிந்து வந்தார். தமிகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுடன் இணைந்து பா.ஜ.க போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேசிய நீரோட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும். மத்திய பா.ஜ.க, ஆட்சியில் சென்னை திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்ம ஜே.பி. நட்டா தெரிவிததார்.

தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கட்டமைப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி செல்லுமிடங்கள் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.பா.ஜ., நடத்திய வேல் யாத்திரை இரண்டு வெற்றிகளை தந்துள்ளது. முதலாவது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேல்– ஐ தூக்கியது. மற்றொன்று : தைபூசத்திற்கு தமிழக அரசு பொதுவிடுமுறை வழங்கியது. இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி என்று ஜே.பி. நட்டார் கூறினார்.

பா.ஜ.க வின் அழுத்தத்தால் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வேலை தூக்கும் நிலை உருவானது. நெசவுத்தொழிலுக்காக தமிழகத்திற்கு ரூ.1,600 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜே.பி.நட்டா உரையாற்றினார்.

முன்னதாக ஜே.பி. நட்டா, மதுரையில் நடைபெற்ற பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் மாநிலதலைவர் டாக்டர் முருகன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி, இணைபார்வையாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்