Mon. Nov 25th, 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரின் பேட்டியில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்….


கொரோனாவால் அடிவாங்கிய துறைகளுக்கு மொத்தமாக 1.1 லட்சம் கோடி ரூபாய் உத்தரவாத கடன் வழங்கப்படும்.

கொரோனாவால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.  

மருத்துவ துறைக்கு 7.95 சதவீதத்துடன் 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

சுகாதாரத் துறை தவிர்த்து மற்ற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும், அதற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருக்கும்.

சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்

தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவசர கால கடனாக 1.5 லட்சம் ரூபாய் கோடி கடன் வழங்கப்படும்.

25 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு 1.25 லட்சம் ரூபாய் வரையிலும், டூரிஸ்ட் ஏஜென்ஸிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதபோல, சுற்றுலா வழிகாட்டிகளுக்கு (Tourist Guides) 1 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

.