Sat. May 18th, 2024

தமிழ்கம் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் நூறு ரூபாயை கடந்து விற்பனை ஆகி வருகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள், அன்றாட பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டீசலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், காய்கறி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாள்தோறும் விலை உயர்த்தப்பட்டு வருவதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் அதேவேளையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில், பொதுவுடைமைக் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த பல நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்த நிலையில், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 7 ஆம் தேதி முதல் 17 ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இதே……