மத்தியஅரசின் கொரோனாத் தடுப்பு ஆய்வுக் குழு மற்றும் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் திடீரென விலகியுள்ளார்.
தன்னுடைய விலகல் குறித்து எந்தவிதமான காரணத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என ஷாகித் ஜமீல் தெரிவித்துள்ளார். .
சார்ஸ்கோவிட் வைரஸின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.
நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆய்வுக் குழுவுக்கும், ஆலோசனைக் குழுவுக்கும் தலைவராக மூத்த வைராலஜிஸ்ட் ஷாகீத் ஜமால் நியமிக்கப்பட்டார்.
அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர்அறிவியல் துறையின் தலைவராகவும் ஷாகித் ஜமீல் இருந்து வருகிறார்.
இந்தியாவில் தற்போது 3 உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதில் பிரிட்டனின் பி.1.1.7 வைரஸ், தென் ஆப்பிரிக்காவின் பி.1.351, பிரேசலின் பி.1. வகை வைரஸ்கள் உள்ளன.
இந்த வைரஸ் குறித்தும் இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் குறித்தும் ஷாகித் ஜமீல் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் எந்தவிதமான காரணமும் வெளியிடாமல் ஷாகீத் ஜமீல், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்
ஆனால், அவரின் பதவி விலகலுக்கான காரணங்கள் குறித்து ஆங்கில செய்தி சேனல்களில் பல்வேறு தகவல்கள் ஒளிப்பரப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக ஒரு விவகாரத்தை அனைத்து ஊடகங்களும் முதன்மையாக வெளியிட்டன.
அண்மையில், ஷாகித் ஜமீல் அமெரி்க்காவில் வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மெதுவாக நடந்துவரும் தடுப்பூசி, கொரோனா பரிசோதனையை வேகப்படுத்தாதது,
தடுப்பூசிப் பற்றாக்குறை ஆகியவை பற்றி குறிப்பிடும் போது மத்தியஅரசை விமர்சி்த்திருந்தார்.
மேலும், கரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை நடத்த போதுமான ஒத்துழைப்பு மத்தியஅரசிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அவர் வெளியிட்ட கட்டுரைக்கு, மத்திய அரசின் உயர்மட்டத்தில் இருந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்த்த பொறுப்பில் உள்ளவர்களிடம் இருந்தும் அவருக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது என்றும் ஊடகங்களில் செய்தி ஒளிப்பரப்பாகி வருகிறது.
கொரோனோ தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷாகித் ஜமீலின் பதவி விலகல் மூத்த அறிவியலாளர்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.