மேற்கு வங்க மாநிலத்தில் புயலைக் கிளப்பிய நாரதா லஞ்ச ஊழல் வழக்கில், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்க அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இன்று காலை ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த தகவல் கிடைத்தவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ அலுவலகத்திற்கு விரைந்துச் சென்று, தன்னையும் கைது செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கைது செய்யப்பட்டள்ள அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா,ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால், சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவிட்டு, சிபிஐ அலுவலக வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வரின் இந்தப் போராட்டத்தால் கொல்கத்தாவில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.