Sat. Nov 23rd, 2024

கொரோனோ பேரிடர் காலத்தை வென்றிட புதிதாக பதவியேற்றுக்கொண்ட திமுக அரசு, போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்பை விரிவுப்படுத்துதல், மருத்துவ சிகிச்சை முறையை மேம்படுத்துதல் என ழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய் தொற்றாளர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க, பொருளாதார நிலையில் உயர்ந்து இருப்பவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பு மக்களும் கோடிகளில், லட்சங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்கொடை வழங்கி வருகின்றனர்.

செல்வாக்குமிக்க செல்வந்தர்களின் பெயர்கள் ஊடகங்களில் செய்தியாக பரவி வரும் நேரத்தில், தனியார் நிறுவன காவாலாளி ஒருவர், வறுமையில் துவண்டு வந்த போதும் தனது ஒரு மாத ஊதியமான பத்தாயிரம் ரூபாயை, அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

அதுதொடர்பான விவரத்தை கேள்விப்பட்டவுடன் மிகுந்த நெகிழ்ச்சியடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த காவலாளியை நேரில் வரவழைத்து பாராட்டி, திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கி வாழ்த்தியுள்ளார்.

நெஞ்சை நெகிழச் செய்யும் இந்த நிகழ்வின் கதாநாயகன் தங்கதுரை. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்கள். குற்றாலம் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை, மனதளவில் கோடீஸ்வரராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதை உலகம் அறிய செய்திருக்கிறார். அதற்கு உதவியத்தொகை ரூ.10,000 கோடி ரூபாயை மிஞ்சி 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தங்கராசுவின் செயல், சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.