Thu. May 2nd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது.

தீர்மானங்கள் விவரம் இதோ….

1.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.

2.தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது.

3.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்.

4.தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்.

  1. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் இதோ….

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் –

கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது –

DIPR-P.R-NO.-55-Honble-CM-Press-Release-All-Party-Meeting-Resolution-Date-13.05.2021-1

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

நாளை முதல் சென்னையில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்..

லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என்றும் லாக்டவுன் விதிகளை மீறுவோரை கண்காணிக்க 30 குழுக்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.