தமிழக சட்டமன்றத்தின் 16 வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.
இதேபோல், முதல்வரின் மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.