கொரோனோ தொற்றை கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கும் பரிசோதனை மையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், அரசு நிர்ணயித்துள்ள தொகைக்கு மேல் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றிவரும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் பல தனியார் ஆய்வகங்களில் ஆர் டி பி சி ஆர் எனப்படும் கொரோனா கண்டறியும் சோதனைக்கு 1200 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர்.
கர்நாடகா, டெல்லி,ஒடிசா ஆகிய இடங்களில் உள்ளதைப் போன்று ரூபாய் 800 என்ற அளவில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைவிடப்பெரிய கொடுமை, கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் சிடி ஸ்கேன் எடுக்கச் செல்லும் போது அவர்களிடம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதன் வழக்கமான கட்டணம் ரூபாய்1500 தான் .இதே ஸ்கேன் அரசு மருத்துவமனையில் 500 ரூபாய்க்கு எடுக்கப் படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களை காப்பாற்ற எரிகிற வீட்டில் பிடுங்குற வரைக்கும் லாபம் என்கிற மனோபாவத்தில் செயல்படும் மருத்துவமனைகள்
ஆய்வகங்களை கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.