Tue. May 21st, 2024

கூடுதல் காவல்துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தமிழக அரசின் உளவுத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, கோவை மாநகரை சுத்தம் செய்துவிட்டுதான் கிளம்புவார் போல……

கோவை மாவட்டத்தில் திமுக அடைந்த படுதோல்விக்கும், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெற்றதற்கும், மாவட்டம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள்தான் காரணம் என்றும், அவர்கள் அத்தனை பேரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அல்லக்கைகளாக மாறி, அதிமுக.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்ததாகவும், காவல்துறையினரின் பிரசாரத்தால், திமுக ஆதரவு மனநிலையில் இருந்த வாக்காளர்கள் கூட கடைசி நிமிடத்தில் அதிமுக.வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் கோவை மாநகரம் மற்றும் புறநகர் மாவட்ட காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளே கொந்தளிக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரிகளாக செயல்படாமல், எஸ்.பி.வேலுமணியின் அல்லக்கைகளாக மாறி செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர்களோடு, அவர்கள் வகித்து வரும் பதவிகளையும் குறிப்பிட்டு, போலீஸ் உயரதிகாரிகள் வாட்ஸ் அப்பில் பரபரப்பான தகவல் தீயாக பரவி வருவதாகவும் கோவையில் உள்ள நல்லரசு தமிழ் செய்திகளின் நலம் விரும்பி ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார்.

முதற்கட்டமாக 15 அதிகாரிகளை கோவை மாவட்டத்தில் இருந்தே தூக்கியடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே.திரிபாதிக்கு, கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிக்கை அனுப்பி அனுமதி கேட்டிருப்பதாகவும் கோவை காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரியும் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் உலவி வந்த கறுப்பு ஆடுகளின் பட்டியல் இதோ… கீழே உள்ள இந்த அதிகாரிகள் எஸ்.பி.வேலுமணியின் கண் அசைவுக்கு ஏற்ப பணிபுரிந்ததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியிட மாற்றமே பெறாமல் ஒரு இடத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அரசாங்கத்திடம் வாங்கும் சம்பளத்தை விட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் இருந்து பெற்ற கிம்பளமே பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் ஒவ்வொரு அதிகாரிகளும் பல கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து, சொகுசாக வாழ்ந்து வருவதாகவும் கோபம் கொந்தளிக்க பேசுகிறார்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் பழிவாங்கப்பட்ட நேர்மையான காவல்துறை அதிகாரிகள்…

அனிதா ஏடிஎஸ்பிவே

ஜோஸ், இன்ஸ்பெக்டர்
நுண்ணறிவு பிரிவு

மணிவர்மன் இன்ஸ்பெக்டர்
நுண்ணறிவு பிரிவு

கந்தசாமி இன்ஸ்பெக்டர்
நுண்ணறிவு பிரிவு

ஜோதி இன்ஸ்பெக்டர்

தூயமணி வெள்ளைச்சாமி
இன்ஸ்பெக்டர்

லதா
இன்ஸ்பெக்டர்

பாலமுரளி சுந்தரம்
இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணமூர்த்தி
டிஎஸ்பி, பெரியநாயக்கன்பாளையம்

லோகநாதன்
இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு

ராமகிருஷ்ணன்
இன்ஸ்பெக்டர்
ஐஜி அலுவலகம்

மரிய முத்து
இன்ஸ்பெக்டர்

பாலமுருகன்
டிஎஸ்பி

சிவக்குமார்
டிஎஸ்பி பொள்ளாச்சி

ராஜ்குமார்
இன்ஸ்பெக்டர்

இவர்கள் உள்பட்ட இன்னும் பலர் அதிகாரிகள் என மறந்து, அதிமுக கட்சிக்காரர்களாகவே மாறி, திமுக வுக்கு எதிராக செயல்பட்டவர்கள்..

இதில் பலர் பதினைந்து ஆண்டுகளாக கோவையையே சுற்றி சுற்றி வருகின்றனர்..

கோவை மாவட்டம் மற்றும் மாநகரில் அதிமுக உறுப்பினர்களாகவே மாறி, செயல்பட்டு வரும் இவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் களையெடுப்பாரா…..

உண்மையான காக்கிகள்

இப்படிபட்ட செய்தி ஒன்று கோவை காவல்துறையை மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை வாட்ஸ் அப் குரூப்களில் தீயாக பரவி வருகிறதாம்…