Sat. May 18th, 2024

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஆளும்கட்சியே மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளன.

கேரளாவில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஆளும்கட்சி கூட்டணி 90 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி முன்னிலை விவரங்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் 126 தொகுதிகளில் தேசிய முற்போக்கு கூட்டணி 78 இடங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அந்த மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 92 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும்கட்சி கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியை அகற்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் வியூகம் அமைத்து கடுமையாக போராடினார். ஆனால் தனி மனுஷியாக நின்று மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.