Sat. May 18th, 2024

இந்தியாவில் புதிதாக 3,60,960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்; இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29,78,709  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.33% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.12% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.55% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் இதுவரை 14,78,27,367 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்குவதற்கு தேவையான ஆக்சிஜன், தடுப்பு மருந்து உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு அனைத்து மாநில அரசுகளும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.