Physicians, nurses, and health workers are working tirelessly to control the spread of coronavirus in Tamil Nadu.
Health workers appear as gods to COVID-19 patients as they risk their lives treating many hundreds of daily. Every single health worker, including government doctors, spend the majority of the 24 hours in a day helping patients leaving no time for breaks or even sleep. Not a single person witnessing this massive endeavor of sacrifice would dissent government doctors.
Dr. Radhakrishnan, Secretary of Public Welfare, has been instrumental in galvanizing hospital workers during such dismal times. We can recall his profound work from the Tsunami in 2004.
Similarly, the performance of police is astounding in the war against Coronavirus. Greater Chennai Police Commissioner Maheshkumar Agarwal IPS has been emphasizing that all police personnel must be vaccinated. He has set up special vaccination and awareness camps in the Greater Chennai area.
The Additional Commissioner of Greater Chennai City Trafice Police Bhavaneeswari kesavaram IPS has been conducting daily awareness campaigns and special camps to vaccinate all those working in the transportation sector, including traffic police and field police officers, such the law-and-order unit. In addition, they have been paying close attention to humanitarian activities, including the provision of coronary impacts and face mask during vehicle checking to raise public awareness.
A special Corona Treatment Center for Police has been set up at the Hi-Tech A Block Hotel at the Anna University Campus, Kotturpuram, Chennai, for the immediate treatment of coroners and their families, no matter how vigilant they may be. Inaugurating it, Police Commissioner Maheshkumar Agarwal expressed his concern to the police officers who are receiving treatment in the facility.
The Commissioner of Police Maheshkumar Agarwal, IPS, who has been working vigilantly to prevent the spread of coronavirus infection was shocked to know that the Washermenpet Deputy Commissioner Subbulakshmi had not taken precautionary measures and medical guidelines while her daughter has been affected by Covid-19 infection. He insisted Ms. Subbulakshmi that she quarantines herself.
Assistant Commissioners and Police Inspectors, who feared that they too would be infected with the Corono virus by the Deputy Commissioner, were relieved by the action of Commissioner of Police Mahesh Kumar Agarwal. They also expressed their heartfelt gratitude to the Commissioner of Police for taking action with the concern that the lives of every constable are important.
காவல்துறை குடும்பத்தில் ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்; வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அறிவுரை…
தமிழகத்தில் கொரோனோ தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் உயிரைக் கொடுத்து பணியாற்றி வருபவர்கள் சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள். 24 மணிநேரத்தில் ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே ஓய்வுக்கு எடுத்துக் கொள்ளும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்களின் சேவையை கண்ணால் காண்பவர்கள் யாரும், அரசு மருத்துவர்களைப் பற்றி தவறான ஒரு வார்த்தைகளையும் உபயோகிக்க மாட்டார்கள்.
கொரோனோ தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தங்கள் உயிரையையே பணயம் வைத்து பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவருமே கண் முன் நடமாடும் கடவுள்களுக்கு இணையானவர்கள் என்று நெஞ்சுருக பேசுகிறார்கள் கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்து திரும்பும் மக்கள்.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்களின் அர்ப்பணிப்பான பணியை ஊக்கப்படுத்துவதிலும், உற்சாகப்படுத்துவதிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் உழைப்பும் அபாரமானது. பேரிடர் காலங்களில் 24 மணிநேரம் கூட பணியாற்றக் கூடியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பதற்கு சுனாமி உள்ளிட்ட எண்ணற்ற பேரிடர் நிகழ்வுகளமாக காட்டலாம். சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடித்தாலே போதும், வெகு விரைவாக தமிழகம் நிம்மதி பெருமூச்சு விடும் நிலைக்கு வந்துவிடும்.
சுகாதாரத்துறைப் போலவே, கொரோனோவுக்கு எதிரான போரில், காவல்துறையின் செயல்பாடுகளும் வியக்க வைக்கிறது. சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதிகாட்டும் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ், பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம், விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
மேலும், சட்டம் ஒழுங்குப் பிரிவு உள்ளிட்ட களப் பணியாற்றும் காவல் அதிகாரிகளைப் போல, போக்குவரத்து துறையில் பணியாற்றும் காவல் அலுவலர்களும் கொரோனோ தொற்றுக்கு ஆளாகிவிடக் கூடாது என்று போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி ஐபிஎஸ்.ஸும் நாள்தோறும் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்து வருவதுடன் போக்குவரத்து துறையில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை நடத்தியுள்ளார்.
மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன சோதனையின் போது கொரோனோ தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் முகக்கசவம் வழங்குதல் உள்ளிட்ட மனிதநேய செயல்பாடுகளிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்கள்.
எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் பணியாற்றினாலும் கூட கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு உடனடியாக உயரிய சிகிச்சை கிடைப்பதற்காக சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹைடெக் ஏ பிளாக் விடுதியில் காவல்துறையினருக்கான தனிச் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. அதனை துவக்கி வைத்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், அங்கு சிகிச்சைப் பெற்று வரும் காவல்துறை அலுவலர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு ஊக்கமளிததார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுடைய குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது, காவல்துறை குடும்ப உறுப்பினர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
கொரோனோ தொற்று பரவலை தடுக்க விழிப்புணர்வுடன் பணியாற்றி வரும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்., வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமியின புதல்வி கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், அவர் பணிக்கு வந்துள்ளது குறித்து தகவல் கிடைத்துள்ளது. தனது குடும்பத்து உறவினருக்கு தொற்று பாதிப்பு இருக்கும் போது அவரோடு தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மருத்துவ வழிகாட்டு நெறிமுறைபடி செயல்படாமல் பணிக்கு வந்த துணை ஆணையர், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோரை அழைத்து கலந்துரையாடியதைப் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார் போலீஸ் கமிஷனர்.
உடனடியாக அவரை வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழஙகினார். அதன்பேரில், பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வண்ணாரப்பேடடை துணை ஆணையர் சுப்புலட்சுமி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
துணை ஆணையர் மூலம் தங்களுக்கும் கொரோனோ தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருந்த உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர், போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வாலின் அதிரடி நடிவடிக்கையால் நிம்மதியடைந்தனர். மேலும், ஒவ்வொரு காவலர்களின் உயிர் முக்கியம் என்ற அக்கறையோடு நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை ஆணையருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.